Posts

தேனம்மை லெக்ஷ்மணன் - 1.வளையாபதி குண்டலகேசி;

Image
ஆசிரியர் குறித்து:  தேனம்மை லெக்ஷ்மணன் கவிஞர், எழுத்தாளர், வலைப்பதிவர், சுதந்திரப் பத்ரிக்கையாளர். சாதனை அரசிகள், ங்கா, அன்ன பட்சி, பெண்பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு ஆகிய ஐந்து நூல்களின் ஆசிரியர். நான்காம் உலகத்தமிழ் கருத்தரங்கத்தில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார். குங்குமம், குங்குமம் தோழி, குமுதம், குமுதம் பக்தி ஸ்பெஷல், குமுதம் ஹெல்த் ப்ளஸ், ஆனந்தவிகடன், அவள் விகடன், கல்கி, இந்தியா டுடே, தேவதை, மல்லிகை மகள், மெல்லினம், லேடீஸ் ஸ்பெஷல், பாக்யா, பூவரசி, சமுதாய நண்பன், நம் தோழி, சூரியக்கதிர், இவள் புதியவள், தினமலர், தினமணி, தினமணிக் கதிர், பெண்கள் ராஜ்ஜியம், புதிய தரிசனம், பரிவு, குறுஞ்செய்தி, தினகரன் வசந்தம், புதிய தலைமுறை, யுகமாயினி, இன் & அவுட் சென்னை, சென்னை அவென்யூ, கொளத்தூர் டைம்ஸ், ஆச்சி வந்தாச்சு, புதிய பயணி, ஹாலிடே நியூஸ், நமது மண்வாசம், கோகுலம், ஷெனாய் நகர் டைம்ஸ், தமிழ்த்தேர், மங்கையர்மலர், ஐபிசிஎன், மகளிர் தரிசனம், தென்றல் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகி வருகின்றன. இளமை விகடன், திண்ணை, உயிரோசை, கீற்று , வார்ப்பு, வல்லினம், அதீதம், முத்துக் கமலம், கழுகு

ரா. இராகவய்யங்கார் இயற்றிய புத்தகங்கள் - 1.தமிழக குறு நிலவேந்தர்கள்

Image
  சேதுசமத்தான மகாவித்துவான், பாசா கவிசேகரர் இரா. இராகவையங்கார் (20 செப்டம்பர் 1870 - 11 சூலை 1946) சிறந்த நூலாசிரியர், உரையாசிரியர், போதகாசிரியர், பத்திராசிரியர், ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், சமயநூலறிஞர். மொழிநூலறிஞர் எனப் பல்திறம் பெற்றுத் திகழ்ந்தவர் ஆவார்.   1888ஆம் ஆண்டில் தன்னுடைய 18ஆம் அகவையில் மதுரையில் உள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அதன் பின்னர் திருச்சிராப்பள்ளியில் உள்ள, பின்னாளில் தேசிய உயர்நிலைப் பள்ளி என அழைக்கப்பட்ட, சேசையங்கார் பள்ளியில் சிலகாலம் இவர் தமிழாசிரியராக இருந்தார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள கல்லூரியில் தமிழாசிரியராக வேலைபார்த்து வந்த உ. வே. சாமிநாத ஐயரோடு இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. அதனால் பழந்தமிழ்ச் சுவடிகளைப் பதிப்பிப்பதில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.   இராமநாதபுர சேதுசமத்தானத்தான அரசராக இருந்த பாசுகரசேதுபதி, தன்னுடைய அரசவையின் தலைமைப் புலவராக இரா. இராகவையங்காரை நியமித்தார்.   1935ஆம் ஆண்டில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறை உருவாக்கப்பட்டது. அத்துறைய

'சோ' @ சோ ராமசாமி இயற்றிய புத்தகங்கள் - 1.எங்கே பிராமணன்? 2.ஹிந்து மஹா சமுத்திரம்

Image
சோ ராமசாமி (அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016), பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் என பல்வேறு பொறுப்புகளை மேற்கொண்டவர். சோ என அழைக்கப்பட்டவர். துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவுநர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின் 'அரசியல் நையாண்டி' எழுத்துக்கள் இவருக்கு 'பத்திரிக்கை உலகில்' தனி இடம் வகுத்துத் தந்தது. இவர் தனது பத்திரிக்கைத்துறைச் பணிக்காக 1985 இல் 'மஹாரான மேவார்' வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986 இல் வீரகேசரி விருதும், 1994 ஆம் ஆண்டு கொயங்கா விருதும், 1998 இல் நச்சிக்கேதஸ் விருதும் பெற்றார். சோ ராமசாமி இயற்றிய புத்தகங்கள்:-  1.எங்கே பிராமணன்? 2. ஹிந்து மஹா சமுத்திரம்   -   ஒன்று  முதல் ஆறு பாகம் வரை  ======================================================================== புத்தகம் 1.எங்கே பிராமணன்? கலாச்சாரம்/ வேதம் சார்ந்த புதினம்/ நாவல்.  காகித உறை/ பேப்பர்பேக்;   440 பக்கங்கள்;  மொழி: தமிழ்;  முதல் பதிப்பு: 1996;  இருபத்தி மூன்றாம் பதிப்பு: 2021. முன்னுரை:  அமெரிக்காவிலிருந்து வெளிவரும் 'டைம்' பத்திரிகையின் சமீபத்