குமார் ராஜசேகர் கவிதைகள்

Related image

கவிதை 1:

காஞ்சி நகரில் வாழ்கின்றாள்
கருணையுள்ள காமாக்ஷி
அவள் கடைக்கண் பார்வை பட்டாலே
விலகும் நம் துயரே பனி போலெ
விண்ணும் மண்ணும் அவள் மடியே
வேதங்கள் நாலும் அவள் மொழியே
வெறும் கற்பூர தீபம் ஏற்றிடினும்
பெரும் கடல் போல கருணை அவள்                                                                                         பொழிவாள்
                                                                  நம்பா மாக்கள் ஆயிடினும்
                                                                தனை நம்பும் மக்கள் ஆக்கிடுவாள்
                                                                காஞ்சி நகரில் வாழ்கின்றாள்
                                                                கருணையுள்ள காமாக்ஷி

#குமார்ராஜசேகர்கவிதைகள்
#காமாக்ஷிகவிதைகள்
--------------------------------------------------------------------------------------------------------------------------

கவிதை 2:

வானத்து வெண்நிலவு வடிவு
கொண்டு வந்த மங்கை

பாறைக்கு பரிசளித்தாள் தன்
பட்டு உடல் தீண்ட நிலாள்

பார்த்த நான் பரிதவித்து பாதியாய் ஆகிவிட்டேன்

பாழுமனம் துடிக்குதடா பாறையாய் பிறக்கவில்லையென !

#குமார்ராஜசேகர்கவிதைகள்
--------------------------------------------------------------------------------------------------------------------------

கவிதை 3:

பாரதி !
அவன் சுதந்திரத் தேர் இந்தியாவின் சாரதி !
அவன் காளிதேவி கண்களையும் பாடினான்
பல கண்மூடி வழக்கங்களையும் சாடினான்
கந்தல் கோட் அணிந்த புலவனுக்கு
அவன் இறந்த பிறகு பந்தல்
போட்டு விழா எடுக்குது இவ்வுலகு !
இப்ப வரும் புலவரெல்லாம் 
தட்டென்றால் பட்டென்று எதுகையாய் எழுதிடலாம் 
யாப்பு எங்கோ சீர் எங்கோ தளை எங்கோ சந்தம் எங்கோ தெரியவில்லை

#பாரதி
#குமார்ராஜசேகர்கவிதைகள்
--------------------------------------------------------------------------------------------------------------------------

கவிதை 4:

                                                         நீரின்றி அமையாது உலகு இது வள்ளுவன் வாக்கு
                                                        நீயின்றி அமையாது என் உலகு எது எந்தன் வாக்கு
                                                                                    நீர் என எங்கிருந்தாலும்
Image result for friendshipவேர் என உன்னை தொடர்வேன்
ஊருக்கு ஒருவர் பிறந்தோம்
உறவினால் நல்ல நட்பை வளர்ப்போம்
காலங்கள் நம்மை பிரித்தாளும்
நல்ல நட்பு காவியத்தை நாம் படைப்போம்
நிலவிலும் களங்கம் காண்பார்
நம் நட்பில் நிறைவே காணட்டும்
நல்ல வேலை தேடி நீ செய்கின்ற யாகம்
பார் பக்கம் வருகுது யோகம் !
#குமார்ராஜசேகர்கவிதைகள்
--------------------------------------------------------------------------------------------------------------------------

கவிதை 5:

Related image

தொலைந்து போன
ஒரு தேவதையை கன்டுபிடிக்க
கடவுள் என்னை
பூமிக்கு அனுப்பினான்...
என் தேடலை முடித்துக்கொண்டேன்
நான் உன்னை பார்த்தவுடன் ....
#குமார்ராஜசேகர்கவிதைகள்
--------------------------------------------------------------------------------------------------------------------------

கவிதை 6:

Related image

வியர்வையில் நனைந்த
உன் நெற்றிப்பொட்டை கண்டால்
நிலவில் நீரா என்று
வியந்து போவார்கள்
விஞ்ஞானிகள் !
#குமார்ராஜசேகர்கவிதைகள்
--------------------------------------------------------------------------------------------------------------------------
Image result for muthalaq

கவிதை 7: முத்தலாக்

வளைக்கரங்கள் வாள் ஏந்தட்டும்
பாரதி தேடிய புதுமை பெண்ணே
யாரிடம் யாருடைய உரிமைக்காக யாசித்து வீழ்ந்து கிடக்கிறாய் ?

உன் முட்டியை உயர்த்து இனி ஒரு
பாரதி உனக்காக பிறந்து வரப் போவதில்லை
உன் வளைக்கரங்கள் வாள் ஏந்தட்டும்
போராடி பெறுவதுதான் வெற்றியும்
உரிமையும் யாசித்து பெறுவதில்லை

எந்த தர்காவிலும், நீதிமன்றத்திலும்
கிடைக்காத உன் உரிமைக்காக
போராடிக்கொண்டு இருக்கிறாய் பேதை பெண்ணே
போதும் நிறுத்து இனி உன் வளை
கரங்கள் வாள் ஏந்தட்டும்

வீழ்ந்து கிடந்தது போதும்
இமயம் என எழுந்து நில்
தீக்கம்பம் என உயர்ந்து நில்
அப்புறம் பார் உன் மூச்சு காற்றிலும் பூகம்பம்

எட்டு திசையும் உனக்கு பகல்தான்
ஏழு சமுத்திரமும் உன் முழங்கால் அளவுதான்
உன் உரிமைக்காக
உன் வளைக்கரங்கள் வாள் ஏந்தட்டும்
பாரதியின் புதுமை பெண்ணே
#குமார்ராஜசேகர்கவிதைகள்
#முத்தலாக்
--------------------------------------------------------------------------------------------------------------------------

கவிதை 8: துரோகம் 

                                                            வீழ்ந்து ஒழிவேன் என நினைத்தீரே
                                                            என் வேலையற்ற வீணர்களே
                                                            புறம் நூறு எம்மை பற்றி புறநானூறும்
Image result for backstabநீர் படித்தால் வீழ்ந்து அழிவேன் என நினைத்தீரே
அந்த பாஞ்சாலங்குறிச்சியின்
புழுதியில் புரண்டவன் நான்
எட்டப்பன் பரம்பரையே எட்டிப்போ என்னை விட்டே
சுட்டு எரிக்கும் சூரியனை, தீப்பந்தம் அழிக்க நினைப்பதுவோ
சீரும் சிங்கத்தை சிறு நரிதான் அடக்க முயல்வதுவோ
                                                               வீழ்ந்து ஒழிவேன் என நினைத்தீரே
                                                                என் வேலையற்ற வீணர்களே !!!

#குமார்ராஜசேகர்கவிதைகள்
#துரோகம்
--------------------------------------------------------------------------------------------------------------------------

கவிதை 9: 

இலக்கணம் எனும் 
சுகப்பிரசவம் தாண்டி 
புதுக்கவிதை எனும் 

சிசேரியன் கண்டிராவிட்டால் 
Image result for image
உணர்வு எனும் என் குழந்தை 
இதயமெனும் 
கற்பப்பையினுள்ளேயே 
ஒருவேளை இறந்து போயிருக்கும்

#குமார்ராஜசேகர்கவிதைகள்
#புதுக்கவிதை
--------------------------------------------------------------------------------------------------------------------------

Comments

Popular posts from this blog

கவிஞர் கண்ணதாசனின் புத்தகங்கள் - 1

எழுத்துசித்தர் பாலகுமாரனின் சரித்திர நாவல்கள்

சிவா @ சிவன் சார் இயற்றிய புத்தகங்கள் - 1.ஏணிப்படிகளில் மாந்தர்கள்