எழுத்துசித்தர் பாலகுமாரனின் சரித்திர நாவல்கள்


எழுத்துசித்தர் பாலகுமாரனின் சரித்திர நாவல்கள்!

பாலகுமாரன் அவரின் எழுத்துக்கள் தொடாத பக்கங்கள் என இலக்கியத்தில் இல்லை.

அவர் ஒரு கவிஞர், சிறுகதை எழுத்தாளர், புதின எழுத்தாளர். புதினத்தில் கூட அவர் தன்னை சிறு வளையத்துக்குள் மாட்டாமல் அனைத்துவித ரசிகர்களையும் கொண்டிருந்தார். அவரின் புதினத்தில் திகில் கதைகள், சரித்திர புதினங்கள், ஆன்மிகம், மனிதர்களில் உயர்ந்தோரின் வாழ்க்கை வரலாறு, குடும்ப வாழ்க்கை, காதல் என அவரின் வாசகர்களை அனைத்துவித எழுத்துக்கும் பழக்கப்படுத்தியவர்.

அவரின் கதைகள் நமக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும், ஒரு பெண் / ஆண் தத்தம் துணைகளின் மனதை, அவர்களுக்குள் இருக்கும் வித்தியாசத்தை புரியவைக்கும், விட்டுக்கொடுத்தலை கற்றுக்கொடுக்கும், வாழ்க்கையில் தவறினாலும் நமது வாழ்க்கையை நேர்மையாக வாழ கற்றுக்கொடுக்கும், மனிதத்தன்மையை தரும், நமது சரித்திரத்தை எண்ணி இறுமாப்பை கொடுக்கும், எப்படி அரசன் வீழ்ந்தான் எனவும் ஒவ்வொரு அரசனும் எவ்வாறு ஆட்சி செய்தனர், நமது பண்டையக்கால வாழ்க்கை முறை, உணவுமுறை, ஆரோக்கியம், குருவின் தேவை என பலதை கற்றுக்கொடுப்பதன் மூலம் வாழ்க்கையை நோக்கும் முறையே மொத்தத்தில் மாறிப்போகும்.

இதுவும் கடந்துபோகும் என அவர் கூறிய வாசகத்தை போல தன்னை உள்நோக்கும் திறத்தினால் அவரின் எழுத்து நம்மை கடந்த காலத்தில் இருந்து விடுவிக்கும்.

இந்த சரித்திர நாவல்கள் திருமகள் நிலையத்தினரால் பதிப்பு கண்டவை.

ஆறு பாகங்களை உடைய (177 அத்தியாயங்கள்) இப்புதினம் முதலில் இதயம் பேசுகிறது வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயில்கட்டப்பட்ட வரலாற்றை, கற்பனை நயத்தோடு, மாமன்னர் இராஜராஜ சோழனை நாயகனாகவும் அவரது மனைவி பஞ்சவன்மாதேவியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டது.

உடையார் முதல் பாகம்
₹360.00




UDAYAR PAAGAM 2 - உடையார் இரண்டாம் பாகம்
₹335.00

UDAYAR PAAGAM 3 - உடையார் மூன்றாம் பாகம்
₹370.00

UDAYAR PAAGAM 4 - உடையார் நான்காம் பாகம்

₹300.00

UDAYAR PAAGAM 5 - உடையார் ஐந்தாம் பாகம்

₹265.00

UDAYAR PAAGAM 6 - உடையார் ஆறாம் பாகம்
₹415.00  
₹385.00



கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புகிறார்கள். ராஜேந்திரர் இதனால் கோபமடைந்து ஸ்ரீ விஜயத்தின் மீது போர் தொடுக்க முடிவெடுக்கிறார். ராஜேந்திரர் வீரமாதேவி உடன் நாகைக்கு செல்கிறார் போர் கப்பல்களை வாங்க மற்றும் கைபற்ற முடிவெடுக்கிறார். இதனிடையே இடங்கை வலங்கை படை வீரர்களிடைம் பகை மேலும் வலுக்கிறது. இராஜேந்திரர் ராஜாதிராஜானை இளவரசு பட்டம் கட்டுகிறார் , அவனும் தனக்கு தனியாக சபையை உருவாக்குகிறான். கங்கே யாதவ் சோழ நாட்டிற்குள் புகுந்து இராஜேந்திறரை கொல்ல முயற்சித்து, அரையன் ராஜராஜனிடம் அகப்படுகிறான். அவனிடம் எல்லா பதில்களையும் பெற்றுவிட்டு அவனை கொன்று விடுகிறார். ராஜேந்திரர் அம்மங்காவை வேங்கி நாட்டிற்கு அனுப்புகிறார். அரையன் ராஜராஜனையும் அனுப்புகிறார். சோழர் படை ஸ்ரீ விஜயத்தை நோக்கி வீறு கொண்டு சென்றது.

GANGAI KONDA CHOZHAN PART 1 - கங்கை கொண்ட சோழன் 1
₹500.00
 
₹445.00
Save: ₹55.00 Discount: 11%

GANGAI KONDA CHOZHAN PART 2 - கங்கை கொண்ட சோழன் - 2
₹460.00
 
₹450.00
Save: ₹10.00 Discount: 2%

GANGAI KONDA CHOZHAN 3 - கங்கை கொண்ட 




சோழன் 


பாகம் 3








₹400.00
 
₹370.00
Save: ₹30.00 Discount: 8%


====================================================================================================================================
#எழுத்துசித்தர்பாலகுமாரன்
#பாலகுமாரன்சரித்திரநாவல்கள் 
#பாலகுமாரனின்நாவல்கள் 
#சரித்திரநாவல்கள்
#எழுத்துசித்தர்
#கங்கைகொண்டசோழன்
#உடையார்


















Comments

Popular posts from this blog

கவிஞர் கண்ணதாசனின் புத்தகங்கள் - 1

சிவா @ சிவன் சார் இயற்றிய புத்தகங்கள் - 1.ஏணிப்படிகளில் மாந்தர்கள்