Posts

Showing posts from February, 2022

சாவி @ சா. விசுவநாதன் இயற்றிய புத்தகங்கள் - 1.இங்கே போயிருக்கிறீர்களா

Image
எழுத்தாளர் பற்றி :  சா. விசுவநாதன் (ஆகத்து 10, 1916 - பெப்ரவரி 9, 2001) சாவி என்ற புனைபெயரில் எழுதிய ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் இதழ் ஆசிரியர். தமிழின் மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவர். சிறுவயதிலேயே இதழ்த்துறையில் நுழைந்த இவர் கல்கி, ராஜாஜி, காமராசர், பெரியார் முதலான முக்கியமானவர்கள் பலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார். கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், தினமணிக் கதிர் போன்ற இதழ்களில் பணியாற்றிய பின்னர் சாவி என்ற பெயரில் வார இதழ் ஒன்றைத் தொடங்கி பல ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார். சாவி @ சா. விசுவநாதன் இயற்றிய புத்தகங்கள் :- 1. இங்கே போயிருக்கிறீர்களா?  *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-* 1. இங்கே போயிருக்கிறீர்களா?  பயணக் கட்டுரைகள்.   காகித உறை /பேப்பர்பேக்;  360 பக்கங்கள்;  மொழி: தமிழ்;  முதற் பதிப்பு: 2012. Buy from Bookwomb! இங்கே போயிருக்கிறீர்களா   இந்த நூல் இங்கே போயிருக்கிறீர்களா, சாவி அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.    ...

நாவலர் கு.சடகோபன் இயற்றிய புத்தகங்கள் - 1.திருக்கோளூர்ப் பெண்பிள்ளை இரகசியம்

Image
கவிராயர் குடும்பத்தில் பிறந்தவரான நூலாசிரியர் முனைவர் நாவலர் கு.சடகோபன் அவர்கள் மகாகவி பாரதியார் மீது அதிக ஈடுபாடு கோண்டவர். பல கவியரங்கங்களிலும், மேடைப்பேச்சுகளிலும் தொடர்ந்து பேசி வருகிறார். வைணவத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் புலமையும் மிக்கவர். சமயம், சமயப் பெரியோர்கள், திருக்கோவில்கள், தமிழ்நாட்டுத் தலைவர்கள் குறித்தெல்லாம் நூல்கள் பல எழுதியுள்ளார்.  காந்திய சிந்தனையில் முதுகலை முதல் முனைவர் பட்டம் வரை பெற்றவர். டாக்டர் நாவலர் கு.சடகோபன் M.A.,Ph.D.,  கு.சடகோபன் 15.06.1943ஆம் நாளில் நம்மாழ்வாரின் நெஞ்சம் பறிகொண்ட தென்திருப்பேரை என்னும் திருப்பதியில் பிறந்தார். தந்தையார் பெயர் தெ.சா.குழைக்காதன், தாயார் பெயர் கு.ஆண்டாள். ஸ்ரீவைகுண்டத்தில் தொடக்க கல்வியையும் உயர்நிலைப்பள்ளி படிப்பையும் பயின்றார். திருநெல்வேலி ம.தி.தா. இந்தக் கல்லூரியில் புகுமுக வகுப்பு பயின்றார். பொறியாளர் பட்டயபடிப்பை சங்கர் பாலிடெக்னிக்கில் படித்தார். காந்திய சிந்தனையில் M.A. பட்டத்தை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பெற்றார். "இராமானுசர் காந்தி அடிகள் வாழ்வும் சிந்தனைகளும் ஓர் ஆய்வு" என்னும் பொருளில் ஆராய்ச்சி ச...

பா.கமலக்கண்ணன் இயற்றிய புத்தகங்கள் - 1.சதுரகிரியில் கோரக்க சித்தர்; 2.இறை அருளாளர் இராமலிங்கர் வாழ்வும் வாக்கும்

Image
  திரு.பா.கமலக்கண்ணன் அவர்களின் முதல் நூல் 'ஞானக்கனல்' வானதி பதிப்பகத்தால்  1989-ல் வெளியிடப்பெற்று இதுவரை பத்து பதிப்புகள் வந்துள்ளன. இவர் திருஅருட்பா 6733 பாடல்களுக்கும் ஞானவிளக்க உரை எழுதியுள்ளார். தேவாரம், திருவாசகம், திருமந்திரம், சிவஞானபோதம், ஆகிய அனைத்தும் வேதங்களின் விளக்கமே என்று நிறுவி நூல்களை உருவாக்கியுள்ளார். திருவள்ளுவரின் சுயசரிதையை வெளிப்படுத்தி அவர் பிறந்தது கரூர்; இயற்பெயர்: சாம்புவமூர்த்தி, தந்தையார் சாம்பசதாசிவன் என்றும் அவர் அகத்தியருடைய சீடர் என்றும் நிறுவியுள்ளார். சிலப்பதிகாரத் தலைமை பொற்கொல்லன் ஒரு யவனன் என்று நிறுவியுள்ளார். இவர் தமிழில் முப்பத்திரண்டு நூல்களும் ஆங்கிலத்தில் நான்கு நூல்களும் உருவாக்கியுள்ளார். அவ்வைக்குறள், ஞானவாசிட்டம் ஆகிய அரிய நூல்களை இவர் வெளிக்கொணர்ந்துள்ளார். இவருடைய 'சித்தர் தத்துவம்' என்ற நூல் 2001-ம் ஆண்டில் சிறந்த நூலாகத் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப் பெற்றது. ====================================================================== சதுரகிரியில் கோரக்க சித்தர்:-  Buy Books from Bookwomb - சதுரகிரியில் கோ...